Thursday, August 8, 2013

முழு எலுமிச்சை ஊறுகாய்

 
தேவையானவை: சிறிய எலுமிச்சம்பழம் - 10, வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை கப், கடுகு, பெருங்காயம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: எலுமிச்சம் பழங்களை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை பழங்கள் மூழ்கும் அளவுக்கு விட்டு மூடவும். 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து, கத்தியால் நான்காக கீறி, உப்பு, மிளகாய்தூள், வெந்தயத்தூள் கலந்து அடைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். ஒரு வாரம் கழித்து உபயோகப்படுத்தவும்

No comments:

Post a Comment