Thursday, August 8, 2013

பிரெட் மசாலா


தேவையான பொருட்கள்

பிரெட், பட்டர். (பிரெட்டின் மேல் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்யவும்).
மசாலா செய்ய...
கொண்டைக் கடலை - 200 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தலா 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி, முதலில் பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா இவற்றை சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இந்த கிரேவியை டோஸ்ட் செய்த பிரெட்டின் இடையில் வைத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment