தேவையானவை: அவல் (கெட்டி அவல்) - ஒரு கப், புளி - நெல்லிகாய் அளவு, கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டி எடுக்கவும். உப்பு, ரசப்பொடி கலந்து, அதில் அவலை கலந்து ஊறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். பிசிறிய அவலை போட்டு 2 நிமிடம் கிளறவும். நன்கு உதிர்ந்து வந்ததும் இறக்கினால்... புளி அவல் தயார்.
குறிப்பு: குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய இந்த காலை டிபன், சுகர் கம்ப்ளெய்ன்ட் இருப்பவர்கள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது
No comments:
Post a Comment