Friday, August 9, 2013

உருளைக்கிழங்கு(ஆலு) பராத்தா


தேவையான பொருட்கள் 
மசாலாவிற்கு
  • உருளைக்கிழங்கு – 4 -5
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • சீரகம் – 1 /2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2 -3
  • மல்லித்தழை பொடியாக நறுக்கியது – கையளவு
  • கரம் மசாலா – 1 /2 தேக்கரண்டி
  • அம்சூர் அல்லது உலர் மாங்காய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
பராத்தாவிற்கு
  • கோதுமை – 2 கப்
  • சப்பாத்தி தேய்ப்பதற்கு கோதுமை மாவு – 1 /4 கப்
  • நெய்/ எண்ணெய் / வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தயிர் – 2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – தேவையான அளவு
  • பராத்தா போடுவதற்கு – 2 – 3 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய்
செய்முறை
  1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம்,பச்சை மிளகாய்சேர்த்து வெடிக்க விட்டு தனியே வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
  3. மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், சீரகத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் அல்லது நெய், தயிர் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு மிருதுவாகப் பிசையவும்.
  5. உருண்டையை ஈரத் துணியால் 20 -30 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து எடுத்து மீண்டும் பிசையவும்.
  6. மசாலா மற்றும் கோதுமை மாவு உருண்டை ஆகியவற்றை சிறு சிறு சம அளவு உருண்டைகளாக தனித்தனியாக உருட்டிக் கொள்ளவும்.
  7. மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல வட்டமாகத் தேய்க்கவும். பின் மசாலாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி நடுவில் வைத்து எல்லா பக்கத்திலிருந்தும் சேர்த்து மசலாவை மூடவும்.
  8. இப்போது உருண்டையை உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்தி மசலாவை சமமாகப் பரப்பவும்.
  9. உலர்ந்த மாவு தூவி சீரான வட்டமாகத் தேய்க்கவும்.
  10. சூடான தவாவில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
  11. உருளைக்கிழங்கு(ஆலு) பராத்தா தயிர் அல்லது பருப்புடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment