Saturday, August 10, 2013

ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை


தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும்.
தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து உருட்டி, குழிவாக செய்து அதனுள் 2 ஸ்பூன் அளவு தேங்காய் கலவையை வைத்து மூடவும். இதே போல் மொத்தத்தையும் தயார் செய்யவும்.

No comments:

Post a Comment