Thursday, August 8, 2013

கார நார்த்தங்காய் ஊறுகாய்

 
தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய், வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பொடியை நார்த்தங்காய் துண்டுகளின் மேல் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஊறியதும் பயன்படுத்தவும். 
இந்த ஊறுக்காய் தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

No comments:

Post a Comment