Friday, August 2, 2013

சென்னா பேடா

தேவையானவை: வெள்ளை சென்னா - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - 5, பூண்டு - 4 பல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள், ஊறிய சென்னாவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும், அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை சேர்த்து... மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment