Friday, August 9, 2013

ஹெர்பல் பால்ஸ்


தேவையானவைஅரிசி மாவு: 1 கப், வெண்ணெய் - டேபிள்டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, உப்பு, வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து மாவில் போட்டு கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்தால்... ஹெர்பல் பால்ஸ் ரெடி!
குறிப்பு: தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.

No comments:

Post a Comment