Saturday, August 3, 2013

முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவைபாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 10 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி வெந்ததும், ஆய்ந்து நறுக்கிய முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, கலவையை பிழிந்து நீரை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல், கீரை - பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரையில் தங்க பஸ்பம் சத்து உள்ளது. இரும்பு சத்தும் உள்ளது. அடை, வடை, கூட்டு, பொரியல், பக்கோடா என்று பலவிதமாக தயாரித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment