Saturday, August 3, 2013

கேழ்வரகு இனிப்பு தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறைகேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. திடீர் மாவுகளுக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம். வெல்லத்துக்கு பதில் கருப்பட்டியும் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment