Saturday, August 3, 2013

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வேர்க்கடலையை நன்றாக தேய்த்துப் புடைத்து, தோல் நீக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால் அதுதான் சரியான பதம்). கடலையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பாகை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பிறகு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: கிராமப்புறங்களில் கடலை உருண்டை முக்கியமான தின்பண்டம்.

No comments:

Post a Comment