Saturday, August 10, 2013

பிடி கொழுக்கட்டை


தேவையானவை: பச்சரிசி ரவை - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, வறுபட்டதும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். 2 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி ரவை, தேங்காய் துருவலை சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு எல்லா வகை சட்னியும் தொட்டுக் கொள்ளலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

No comments:

Post a Comment