Saturday, August 10, 2013

எள்ளு சாதம்


    தேவையான பொருட்கள்
  • 1. வெள்ளை எள் - 1/4 கப்
  • 2. துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
  • 3. மிளகாய் வற்றல் - 4
  • 4. புளி - சிறிது [1/2 மேஜைக்கரண்டி அளவு]
  • 5. அரிசி - 1 கப்
  • 6. வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி
  • 7. உப்பு
  • 8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  • 2. கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
  • 3. கறிவேப்பிலை
  • 4. பெருங்காயம்
  • 5. மிளகாய் வற்றல் - 1
  • செய்முறை:
  • அரிசியை கழுவி சாதம் வடிக்கவும். இதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
  • வெள்ளை எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
  • 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவும்.
  • மிக்ஸியில் எள், மிளகாய், தேங்காய் துருவல், புளி அனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு விழுதாக் அரைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் சாதத்தில் சேர்த்து வேர்கடலையும் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.

No comments:

Post a Comment