Saturday, August 10, 2013

சாபுதானா கிச்சடி


தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை (ஒன்று இரண்டாக உடைத்தது) - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்
ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பெருங்காயத்தூள் இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். பொன் னிறம் ஆனதும் பிசிறி வைத் துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து மேலும் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறவும் நல்ல மணம் வந்ததும் இறக்கவும்

No comments:

Post a Comment