தேவையானவை: அவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - கேரட் (சிறியது), வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். வெங்காயத் துண்டுகளை போட்டு கிளறவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து,
மஞ்சள்தூள் போட்டு கலக்கவும். பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும். நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்.... ஆலுபுவா தயார்.
குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்
No comments:
Post a Comment