தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு பிசிறினாற்போல் கலக்கவும்.
மாவு கலவையை புட்டு குழாயில் சிறிதளவு போட்டு, தேங்காய் துருவல் சேர்க்கவும். இப்படி மாற்றி மாற்றி மாவு மற்றும் தேங்காய் துருவல் போட்டு குழாயை நிரப்பவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தட்டினால், குழாயை விட்டு புட்டு வெளியே வரும். இதனுடன் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: இது, இரும்புச் சத்து நிறைந்தது
No comments:
Post a Comment