Saturday, August 10, 2013

தாணிய பணியாரம்


தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, நறுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : அரிசி, பருப்பு வகைககளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். உப்பு, தேங்காய் துருவல், இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலக்கவும்.குழி சட்டியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மாவு கலவையை அரை குழி வருமாறு விடவும். வெந்ததும் குச்சியால் திருப்பி விடவும், பொன்னிறமானதும் எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தக்காளி சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்

No comments:

Post a Comment