Saturday, August 10, 2013

பம்கின் பூரி


தேவையானவை: பரங்கிக்காய் துருவல் - 2 கப், கோதுமை மாவு - 3 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் பரங்கிக் காய் துருவலை போட்டு வதக்கவும். வெல்லம், உப்பு சேர்த்துக் கலந்து விடவும். நன்கு ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
மாவு கலவையில் சிறிது எடுத்து வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டு, பொரிந்து வந்ததும் திருப்பிவிட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment