Saturday, August 10, 2013

வெஜ் பணியாரம்


தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டை கோஸ் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள்
ஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி மாவில் வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி - பச்சை மிளாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கலக்கவும். குழி சட்டியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும். வெந்ததும் திருப்பி விடவும். நன்கு வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: சத்து நிரம்பிய இந்த பணியாரம், எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது

No comments:

Post a Comment