Saturday, August 10, 2013

கோதுமை ரவை கஞ்சி


தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பால் - 300 மில்லி, வறுத்த முந்திரி - 4, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை : கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கோதுமை ரவை நன்கு வெந்து குழைந்து வந்ததும் இறக்கவும். காய்ச்சிய பாலை சேர்க்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... கோதுமை ரவை கஞ்சி தயார்.
குறிப்பு: இனிப்பு பிடிக்காதவர்கள் உப்பு, மோர் கலந்து பருகலாம்

No comments:

Post a Comment